ஏப்ரல் 1 முதல் 9 லட்சம் வாகனங்களுக்கு தடை: மத்திய மந்திரி நிதின் கட்கரி

அரசுப்பேருந்துகள் உள்ளிட்ட 9 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய வாகனங்கள் வாங்கப்படும் என நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.;

Update: 2023-01-31 08:51 GMT

புதுடெல்லி,

மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும் என மத்திய மந்திரி நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

இதன்மூலம், அரசுப்பேருந்துகள் உள்ளிட்ட 9 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய வாகனங்கள் வாங்கப்படும் என தெரிவித்துள்ள நிதின் கட்காரி , சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத எத்தனால், மெத்தனால் மற்றும் மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்