ஜம்மு-காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் 9 காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர் - மத்திய அரசு தகவல்

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் 9 காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என மத்திய இணை மந்திரி நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-12-14 12:57 GMT

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் 9 காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் மத்திய இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறியதாவது:-

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் 9 காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 2022-ம் ஆண்டில் 4 பேரும், 2020-ம் ஆண்டில் ஒருவரும், 2021-ம் ஆண்டில் 4 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இதில், காஷ்மீர் ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ராய், கடந்த 3 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு திட்டங்களுக்காக சுமார் 2,815 கோடி ரூபாயை மத்திய உள்துறை அமைச்சகம் செலவிட்டுள்ளது. கடந்த 2019-20-ல் ரூ. ஆயிரத்து 267 கோடியும், 2020-21ல் ரூ.611 கோடியும், 2021-22ல் ரூ.936.095 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்