9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம்; கர்நாடக அரசு உத்தரவு

9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.;

Update: 2022-07-12 20:37 GMT

பெங்களூரு:

கர்நாடக அரசு 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி பெலகவி வருவாய் மண்டல கமிஷனர் அம்லன் ஆதித்ய பிஸ்வாஸ், பெங்களூரு வருவாய் மண்டல கமிஷனராகவும், ராஜேந்திரா கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகவும், கதக் மாவட்ட கலெக்டர் சுந்தரேஸ்பாபு பெங்களூரு ஸ்மார்ட் சிட்டி திட்ட நிர்வாக இயக்குனராகவும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட நிர்வாக இயக்குனர் பணியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த ராஜேந்திர சோழன் அதில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொப்பல் மாவட்ட கலெக்டர் சுரல்கர் விகாஸ் கிஷோர் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளராகவும், உணவு கழக நிர்வாக இயக்குனர் சிவானந்த கபசி தாவணகெரே மாவட்ட கலெக்டராகவும், கர்நாடக மாநில தேர்தல் ஆணைய செயலராளர் ஹொன்னாம்பா கதக் மாவட்ட கலெக்டராகவும், சிக்பள்ளாப்பூர் கலெக்டர் லதா பெங்களூரு புறநகர் மாவட்ட கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணா மேலணை திட்ட மறுவாழ்வுத்துறை பொது மேலாளர் லொகன்டே சினேகல் சுதாகர் உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்