ஜி.எஸ்.டி. வரி செலுத்த கூறி தனியார் நிறுவனத்தில் ரூ.9½ கோடி மோசடி; 2 பேர் கைது

ஜி.எஸ்.டி. வரி செலுத்த கூறி தனியார் நிறுவனத்தில் ரூ.9½ கோடி மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-26 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூரு சதாசிவாநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிலையில் அந்த நிறுவன அதிகாரிகளை தொடர்புகொண்ட 2 பேர் தங்களை தணிக்கை குழு அதிகாரிகள் என கூறி அறிமுகம் செய்துள்ளனர். அப்போது அவர்கள், தனியார் நிறுவனம் ரூ.9½ கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) செலுத்த வேண்டி உள்ளதாகவும், வரியை செலுத்தவில்லை என்றால் விசாரணைக்கு உத்தரவிடப்படும் எனவும் கூறி உள்ளனர். இதனை நம்பிய தனியார் நிறுவன அதிகாரிகள், அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக ரூ.9½ கோடியை செலுத்தினர்.

அதன்பிறகு தனியார் நிறுவன அதிகாரிகளால் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. அப்போது தான் மர்மநபர்கள், தணிக்கை குழு அதிகாரி என கூறி ரூ.9½ கோடியை மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்த சஞ்சய் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிகில் மற்றும் வினய் பாபு ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்