இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை வெள்ளம் காரணமாக 88 பேர் உயிரிழப்பு

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை வெள்ளம் காரணமாக தற்போது வரை 88 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

Update: 2023-07-12 16:02 GMT

சிம்லா,

கடந்த 3 நாட்களில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என இமாச்சலப் பிரதேசம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 1300 சாலைகள் சேதமடைந்துள்ளன. 40 பாலங்கள் சிதைந்துள்ளன. 79 வீடுகள் முற்றிலுமாக தரைமட்டமாகின. 333 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. சிம்லா - மனாலி, சண்டிகர் - மனாலி, சிம்லா - குல்கா தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டதால் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் திண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை வெள்ளம் காரணமாக தற்போது வரை 88 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. 16 பேர் காணவில்லை என்றும் 100 பேர் காயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் 492 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்