மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க பெங்களூருவில் 8 மண்டலங்களுக்கு தலா ஒரு செயல்படை

பெங்களூருவில் 8 மண்டலங்களுக்கு தலா ஒரு செயல்படை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2022-05-20 16:10 GMT

பெங்களூரு, மே.21-

பெங்களூருவில் 8 மண்டலங்களுக்கு தலா ஒரு செயல்படை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

சுத்திகரிப்பு மையம்

பெங்களூருவில் கடந்த 17-ந் தேதி இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. உல்லால் பகுதியில் பெய்த கனமழையால் அந்த பகுதியில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மிதந்தன. வெள்ள பாதிப்புகளை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று 3-வது நாளாக மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். கே.ஆர்.புரம் தொகுதியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி பசவராஜ் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

எலகங்கா, ஹெப்பால் பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து அதிகளவில் நீர் கே.ஆர்.புரத்திற்கு வருகிறது. ஹெப்பாலில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கூடுதலாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.42 கோடியில் கால்வாய் மேம்படுத்தப்படும். இங்கு கால்வாய் சிறியதாக உள்ளது. அதனால் மழைநீர் குடியிருப்பு கட்டிடங்களுக்குள் வந்து விடுகிறது.

8 செயல்படைகள்

900 மீட்டர் நீளத்திற்கு கூடுதலாக கால்வாய் அமைக்கிறோம். இதை செய்தால் மழைநீர் வெளியே வராது. மேலும் கால்வாய் பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றும்படியும் உத்தரவிட்டுள்ளேன்.

மழைநீரால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் நோக்கத்தில் 8 மண்டலங்களில் தலா ஒரு செயல்படை வீதம் 8 செயல்படைகள் அமைக்க முடிவு செய்துள்ளேன். அந்த செயல்படைகள் இன்றே (நேற்று) அமைக்கப்படும்.நீர்நிலை பகுதியில் குடியிருப்பு கட்டிடங்கள் கட்ட பெங்களூரு வளர்ச்சி ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதை உடனே வாபஸ் பெறும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். எழுத்துப்பிழை ஆகிவிட்டதாக அதிகாரிகள் கூறினர். அதை ஏற்க முடியாது. அவ்வாறு கூறுவது முட்டாள்தனமானது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்