மைசூருவில் கனமழைக்கு ஒரே கிராமத்தில் உள்ள 8 வீடுகள் சேதம்

மைசூருவில் கனமழைக்கு ஒரே கிராமத்தில் உள்ள 8 வீடுகள் சேதமடைந்துள்ளன.

Update: 2022-10-20 18:45 GMT

மைசூரு:

மைசூரு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மேலும் வீடுகளுக்குள் மழை தண்ணீர் புகுந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா வருணா தொகுதிக்குட்பட்ட சித்தனஉண்டி கிராமத்தில் தொடர் கன மழைக்கு 8 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் குடிசை, ஓட்டு வீடுகள் அடங்கும். இதுபற்றி தகவல் அறிந்த யதீந்திரா சித்தராமையா, அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தி பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நிவாரணம் வழங்குவதாக உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்