அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 77 மாணவர்களுக்கு திடீர் வாந்தி-மயக்கம்

சித்ரதுர்கா அருகே அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 77 மாணவர்களுக்கு திடீர் வாந்தி-மயக்கம் ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2022-07-22 14:53 GMT

சிக்கமகளூரு;


சித்ரதுர்கா மாவட்டம் பரமசாகரா அருகே இசாமுத்ரா கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் நேற்றுமுன்தினம் மதியம் மாணவர்களுக்கு சத்துணவு பரிமாறப்பட்டது. அப்போது சத்துணவு சாப்பிட்ட 120 மாணவர்களில் 77 பேருக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், 77 மாணவர்களையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பரமசாகரா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 4 பேர் மேல்சிகிச்சைக்காக தாவணகெரே அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் அறிந்து அரசு ஆஸ்பத்திரிக்கு, பரமசாகரா தொகுதி எம்.எல்.ஏ. சந்திரப்பா மற்றும் கலெக்டர் கவிதா மன்னிக்கேரி மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து மாணவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

இதற்கிடையே சுகாதாரத்துறையினர், அரசு பள்ளிக்கு விரைந்து சென்று சமையல் கூடத்தில் உணவு மாதிரியை எடுத்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் என்ன காரணத்திற்காக மாணவர்களுக்கு, வாந்தி-மயக்கம் ஏற்பட்டு என்பது தெரியவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்