நாடு முழுவதும் 7.58 கோடி பேருக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு தகவல்

அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.;

Update: 2022-07-29 14:34 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 7.58 கோடி மக்கள் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சுகாதாரத்துறை இணை மந்திரி டாக்டர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;- உலக சுகாதார அமைப்பின் தகவல் படி, உலகம் முழுவதும் 203 நாடுகளில் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கொரொனா தொற்று ஏற்பட்ட நபர்களுக்கு குறைந்தது 3 மாதங்கள் கழித்து தான் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட 6 மாதங்களுக்கு பின்னரே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

கடந்த ஜூலை 15 முதல், அரசு தடுப்பூசி மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஜூலை 26 நிலவரப்படி, 7.58 கோடி பேருக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்