திருட்டு வழக்கில் 32 ஆண்டுகள் தலைமறைவு; 73 வயது முதியவர் கைது

திருட்டு வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக கோர்ட்டு அறிவித்தது.;

Update: 2023-02-18 14:30 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் சப் அர்பன் பொரிவாலியில் கடந்த 1990ம் ஆண்டு திருட்டு சம்பவம் நடைபெற்றது. இதில்,ஈடுபட்ட குற்றவாளி தலைமறைவானார்.

இதனை தொடர்ந்து திருடனை தேடப்படும் குற்றவாளியாக டிண்டோஷி நகர கோர்ட்டு அறிவித்தது. மேலும், தலைமறைவான திருடனை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், இந்த திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி 32 ஆண்டுகளுக்கு பின் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். 1990ம் ஆண்டில் இந்த திருட்டு நடைபெற்ற நிலையில் 32 ஆண்டுகளுக்கு பின் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிக்கு தற்போது 73 வயது ஆகுகிறது. குற்றவாளியான 73 வயது முதியவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்