இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் 72 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் தடை - ஆன்லைன் மோசடிக்கு எதிராக நடவடிக்கை
கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் 72 லட்சத்து 28 ஆயிரம் கணக்குகளை வாட்ஸ் அப் தடை செய்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் சமீப காலமாக ஆன்லைன் வாயிலாக நடைபெறும் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் பெரும்பாலான ஆன்லைன் மோசடிகள் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு நிகழ்த்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் 72 லட்சத்து 28 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் தடை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஆன்லைன் மோசடி புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதில் சுமார் 3 லட்சம் கணக்குகள் பயனர்கள் புகார் அளிப்பதற்கு முன்பே தடை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.