'66 நாடுகளில் இந்து மதத்தை ஒரு மதமாகக் கூட அங்கீகரிக்கவில்லை' - மத்திய மந்திரி மீனாட்சி லேகி பேச்சு
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மை, பல நாடுகளுக்கு பாடமாக உள்ளது என மத்திய மந்திரி மீனாட்சி லேகி தெரிவித்தார்.;
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் 'இந்திய அரசியலமைப்பின் 70 ஆண்டுகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி மீனாட்சி லேகி, முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியும், மாநிலங்களவை எம்.பி.யுமான ரஞ்சன் கோகாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கில் பேசிய மத்திய மந்திரி மீனாட்சி லேகி, "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மை என்பது இந்து மதத்தை அங்கீகரிக்காத பல நாடுகளுக்கு ஒரு பாடமாக உள்ளது. 66-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்து மதத்தை ஒரு மதமாகக் கூட அங்கீகரிக்கவில்லை. ஒரு இந்துவாக எனக்கு அதில் ஒரு பிரச்சனை இருக்கிறது" என்று தெரிவித்தார்.