'சகுரா' அறிவியல் உயர்கல்வி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 64 இந்திய மாணவர்கள் ஜப்பான் பயணம்

ஜப்பான் செல்வதற்காக 11 மாநிலங்களில் உள்ள நவோதயா மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-12-10 01:25 GMT

புதுடெல்லி,

மத்திய கல்வி அமைச்சகம் மற்றும், ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் இணைந்து நடத்தும் 'சகுரா' அறிவியல் உயர்கல்வி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 64 இந்திய மாணவர்கள் ஜப்பானுக்கு செல்ல உள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் ஜப்பானுக்கு குறுகிய கால பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள், அங்குள்ள நவீன அறிவியல், தொழில்நுட்பங்கள் மற்றும் கலாசாரத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

இதன்படி இந்த ஆண்டு அசாம், பீகார், சத்தீஷ்கார், குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், பஞ்சாப், ஒடிசா, லடாக், உத்தர பிரதேசம் மற்றும் கோவா ஆகிய 11 மாநிலங்களில் உள்ள நவோதயா மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த 26 மாணவர்கள் மற்றும் 38 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு ஜப்பானுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்