கர்நாடகத்தில் புதிதாக 606 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 606 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-09-07 21:46 GMT

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 23 ஆயிரத்து 647 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 606 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் பெங்களூரு நகரில் 289 பேருக்கும், ஹாசனில் 48 பேருக்கும், குடகில் 35 பேருக்கும், கோலாரில் 16 பேருக்கும், மைசூருவில் 34 பேருக்கும், ராமநகரில் 28 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிவமொக்கா, துமகூருவில் தலா ஒருவர் என 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒரே நாளில் 451 பேர் குணம் அடைந்தனர். 4 ஆயிரத்து 726 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 2.56 ஆக உள்ளது. மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்