600 ஆண்டு பழமையான மரம் விழுந்து கார் சேதம்

பண்ட்வாலில் 600 ஆண்டு பழமையான மரம் விழுந்து கார் சேதமடைந்து உள்ளது.;

Update: 2022-06-25 23:02 GMT

மங்களூரு:

தட்சிணகன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா சஜ்ஜிபனாடு அருகே லட்சுமண கட்டே பகுதியில் 600 ஆண்டுகள் பழமையான அஸ்வத மரம் உள்ளது. இந்த நிலையில் பழமையான அந்த மரம் நேற்று வேரோடு சாய்ந்தது. அந்த சமயத்தில் அப்பகுதி வழியாக வந்த கார் மீது மரம் விழுந்தது.

இதில் கார் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரை ஓட்டி வந்தவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். 600 ஆண்டுகள் பழமையான மரம் முறிந்து விழுந்ததால், அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்