ஆந்திராவில் ஆட்டோ- தனியார் பேருந்து மோதல் - 6 பெண்கள் பரிதாப பலி
ஆந்திர மாநிலத்தில் ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் சிக்கி 6 பெண்கள் உயிரிழந்தனர்.
காக்கிநாடா,
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் இன்று பிற்பகல் தனியார் பேருந்துடன் ஆட்டோ ஒன்று நேருக்கு நேர் மோதியதில் 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தல்லாரேவு பைபாஸ் ரோடு அருகே, தனியார் பேருந்து, ஆட்டோ மீது மோதியது. இறந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள இறால் பண்ணையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் என அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்தில் 6 பேர் பலத்த காயமடைந்து காக்கிநாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சாலை விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.