உத்தர பிரதேசத்தில் பஸ் - டிராக்டர் டிராலி மோதலில் 6 பேர் பலி

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த ஒருவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Update: 2024-02-26 07:45 GMT

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் உள்ள சமத்கஞ்ச் பஜார் கிராமத்திற்கு அருகே உள்ள பிரயாக்ராஜில் இருந்து நேற்று இரவு பயணிகளை ஏற்றி கொண்டு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள சிக்ராரா பகுதியில் வந்து கொண்டிருந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து எதிரே 7 தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர்-டிராலி மீது அதிபயங்கரமாக மோதியதில் டிராக்டர்-டிராலி கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் நீரஜ் சரோஜ் (28), ராஜேஷ் சரோஜ் (45), சங்ராம் சரோஜ் (25), சாய் முசாஹர் (20), அதுல் சரோஜ் (30), கோவிந்த பிந்த் (30) ஆகியோர் என அடையாளம் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்