மாட்டிறைச்சி விற்க முயன்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய 6 பேர் கைது

மாட்டிறைச்சி விற்க முயன்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய பஜ்ரங்தள பிரமுகர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-29 18:45 GMT

ஹாசன்-

ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா கனிகாலு பகுதியில் மாட்டிறைச்சியை வெட்டி விற்பனை செய்வதாக பஜ்ரங்தள பிரமுகர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பஜ்ரங்தளத்தை சேர்ந்த ரவி, சிவு, திவாகர், ரவி ஆகிய 4 பேர், அந்த வீட்டிற்கு சென்று அங்கு மாட்டிறைச்சி வெட்டி கொண்டிருந்த சந்துரு, லோகேஷ் ஆகியோரை தாக்கினர். இதையடுத்து இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற சக்லேஷ்புரா போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 6 பேரையும் கைது செய்தனர். அவர்கள் 6 பேர் மீதும் சக்லேஷ்புரா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்