உத்தர பிரதேசத்தில் மரத்தில் மோதி பள்ளத்தில் விழுந்த கார் - 2 குழந்தைகள் உட்பட நேபாளத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு
உத்தர பிரதேசத்தில் கார் ஒன்று மரத்தில் மோதி பள்ளத்தில் விழுந்ததில் 2 குழந்தைகள் உட்பட நேபாளத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
ஷிரவஸ்தி,
உத்தர பிரதேசம் மாநிலம் ஷிரவஸ்தி மாவட்டத்தில் கார் ஒன்று மரத்தில் மோதி, பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட நேபாளத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
முன்னதாக நேற்று மாலை எகோனா பகுதியில் கார் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது வீதியில் சென்று கொண்டிருந்த கால்நடைகள் மீது கார் மோதுவதை தவிர்க்க டிரைவர் முயன்றபோது கார் மரத்தில் மோதி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த நேபாளத்தில் உள்ள நேபால்கஞ்ச் நகரின் திரிபுவன் சவுக் பகுதியில் வசிக்கும் 6 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் நிலான்ஷ் (வயது 36), நிதி (வயது 20), தீபிகா (வயது 35), வைபவ் என்ற சோனு (வயது 36) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த இரண்டு குழந்தைகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
விபத்தில் பலத்த காயமடைந்த கார் டிரைவர் பஹ்ரைச் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.