தனியார் மருத்துவமனையில் 6 மாத குழந்தை மர்மசாவு

தனியார் மருத்துவமனையில் 6 மாத குழந்தை மர்மசாவு என்று உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;

Update: 2023-03-09 20:45 GMT

பெங்களூரு:-

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி அருகே கம்பலிபுரா கிராமத்தில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அந்த தம்பதிக்கு திருமணமாகி 6 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தைக்கு கடந்த 15 நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. பல்வேறு ஆஸ்பத்திரியில் காண்பித்தும் குழந்தையின் உடல் நிலை சரியாகவில்லை என தெரிகிறது. இதனால், ஒசகோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் குழந்தையை பெற்றோர் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை திடீரென உயிரிழந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். டாக்டர்களின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் அந்த ஆஸ்பத்திரியில் இதுவரை 4 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளதாக அவர்கள் கூறினர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் இதுகுறித்து உரிய விசாரணை நடத்துவதாக கூறி, போராட்டம் நடத்தியவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்