பீகாரில் வெடி விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

பீகார் மாநிலம் சாப்ரா மாவட்டத்தில் வீட்டில் வைத்திருந்த வெடிபொருட்கள் வெடித்து 6 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-07-24 11:40 GMT

பாட்னா,

பீகார் மாநிலம் சாப்ரா மாவட்டத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த வெடிப்பொருட்கள் வெடித்து 6 பேர் உயிரிழந்தனர்.

வெடிபொருள் வெடிப்பால் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் வேறு யாரும் சிக்கியுள்ளனரா என தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம். தடயவியல் குழு மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு குழுவும் வரவழைக்கப்பட்டுள்ளதுதாக சந்தோஷ் குமார், சரண் எஸ்.பி. கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்