உத்தர பிரதேசத்தில் பனிமூட்டம் காரணமாக சாலை விபத்துகளில் 6 பேர் பலி, 51 பேர் காயம்!

உத்தர பிரதேசத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக நடந்த சாலை விபத்துகளில் 6 பேர் பலியாகினர். 51 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-12-19 12:18 GMT

லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று கடும் மூடுபனி காரணமாக நடந்த பல்வேறு சாலை விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் குறைந்தது 51 பேர் காயமடைந்தனர் என்று அம்மாநில போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுரையா, கான்பூர் தேஹாட், கன்னோஜ், உன்னாவ் மற்றும் கான்பூர் ஆகிய இடங்களில் விபத்துகள் நடந்துள்ளன. இதில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 50 பேர் காயமடைந்துள்ளனர். கன்னோஜில், தேர்வு எழுதச் சென்ற 7 மாணவிகளின் வாகனம் டிரக் மீது மோதியதில் காயமடைந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்