இந்தியாவில் ஒரே நாளில் 5,874 பேருக்கு கொரோனா; மேலும் 25 பேர் பலி

24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 874 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.

Update: 2023-04-30 04:17 GMT

புதுடெல்லி,

நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு நாள்தோறும் இறங்குமுகத்தில் செல்கிறது. இந்தியாவில் நேற்று 7,171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 5,874 பேருக்கு தொற்று உறுதியானது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,39,515 லிருந்து 4,49,45,389 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 25 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 5,31,533 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 8,148 பேர் டிஸ்சார்ஜ் ஆனநிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,43,64,841 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 51,314 லிருந்து 49,015 ஆக குறைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்