பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் கடந்த 5 மாதங்களில் 570 விபத்துகளில் 55 பேர் சாவு

பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் கடந்த 5 மாதங்களில் நடந்த 570 விபத்துகளில் 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2023-06-08 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலை

பெங்களூரு-மைசூரு இடையே 10 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 வழி விரைவுச்சாலையாகவும், 4 வழி சர்வீஸ் சாலையாகவும் உள்ளது. இந்த விரைவுச்சாலை ரூ.9 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விரைவுச்சாலையை கடந்த மார்ச் மாதம் 12-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்த விரைவுச்சாலை அமைக்கப்பட்ட முதல் வாகன ஓட்டிகள் பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு ஒரு மணி நேரத்தில் சென்று வருகிறார்கள். இங்கு வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன. இதே நேரத்தில் பெங்களூரு-மைசூரு சாலையில் விபத்துகளும் அதிகளவு அரங்கேறி வருகிறது. இதனால் பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலை அபாயகரமான சாலையாக மாறி வருகிறது.

55 பேர் சாவு

பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலை கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்டதாலும் அதற்கு முன்பு இருந்தே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை 5 மாதங்களில் பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் 570 விபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் 55 பேர் உயிரிழந்துள்ளனர். 52 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

மேலும் 184 பேருக்கு கை, கால்கள் உடைந்துள்ளதுடன், 279 பேர் லேசான காயங்கள் அடைந்துள்ளனர். இந்த விபத்துகளுக்கு அதீத வேகம் தான் காரணம் ஆகும். அதாவது, விரைவுச்சாலை, சர்வீஸ் சாலையில் வாகனங்கள் கட்டுப்பாட்டை மீறி வேகமாக வருவதால் அதிக விபத்துகள் நடக்கிறது.

இதனால் பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் சர்வீஸ் சாலையை விரைவாக அமைத்து, வாகனங்களில் வேகத்துக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்