இந்தியாவில் மேலும் 55 பேருக்கு கொரோனா - தொற்றுக்கு ஒருவர் பலி
இந்தியாவில் நேற்று மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.;
புதுடெல்லி,
இந்தியாவில் நேற்று முன்தினம் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று மேலும் 55 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இந்த தொற்று பாதிப்புக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 93 ஆயிரத்து 872 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 113 பேர் மீண்டனர். இதுவரை இந்த தொற்றில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 60 ஆயிரத்து 316 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 59 குறைந்தது. இதனால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,653 ஆக சரிந்தது.
தொற்றில் இருந்து மீள முடியாமல் நேற்று முன்தினம் 2 பேர் இறந்தனர். நேற்று ஒருவர் மட்டுமே இறந்துள்ளார். இதையடுத்து தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 903 ஆக அதிகரித்துள்ளது.