இமாச்சல பிரதேசத்தில் பெண்களுக்கு பேருந்து கட்டணத்தில் 50% சலுகை - மாநில அமைச்சரவை ஒப்புதல்
பேருந்துகளில் பெண்களுக்கு 50% கட்டண சலுகை வழங்கும் முடிவுக்கு இமாச்சல பிரதேச மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.;
சிம்லா,
இமாச்சல பிரதேசத்தில் முதல்-மந்திரி ஜெய் ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பெண்களுக்கு பேருந்தில் 50% கட்டண சலுகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி இமாச்சல் தினத்தை முன்னிட்டு முதல்-மந்திரி ஜெய் ராம் தாக்கூர் வெளியிட்டார்.
இந்த நிலையில் பேருந்துகளில் பெண்களுக்கு 50% கட்டண சலுகை வழங்கும் முடிவுக்கு இமாச்சல பிரதேச மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதே போல் கிராமப்புற மக்களுக்கு இலவச வீட்டு குடிநீர் வழங்கும் திட்டம், 'முக்கிய மந்திரி கிரிஹினி சுவிதா யோஜனா' திட்ட பயனாளிகளுக்கு 2 இலவச சிலிண்டர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.