சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update: 2023-04-24 07:21 GMT

புதுடெல்லி,

இந்தியாவிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதிகரித்து வரும் தொற்று பரவலை கவனத்தில் கொண்டு வழக்கறிஞர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அனுமதி அளித்தார்.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தகவல் தெரிவித்துள்ளார். சஞ்ஜீவ் கண்ணா, ரவீந்தர்பட், ஜே.பி.பர்திவாலா, அனிருத்தா போஸ், மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 நீதிபதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்