வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது

சிவமொக்கா டவுனில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-04 15:42 GMT

சிவமொக்கா;


சிவமொக்கா டவுன் பொம்மனகட்டே பகுதியில் இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடப்பதாக வினோபாநகர் போலீசாருக்கு புகார்கள் வந்தன. அந்த புகார்களின் பேரில் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர்.அப்போது வழிப்பறியில் ஈடுபட்டதாக 5 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ரவி, ரமேஷ், மணி, அக்பர், முனாப் ஆகிய 5 பேர் என்பதும், அவர்கள் இரவு நேரங்களில் தனியாக நடந்து வருபவர்களை குறிவைத்து, கத்தியை காட்டி மிரட்டி பணம், தங்கச்சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 2 கத்திகள், மிளகாய் தூள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்