மராட்டிய மாநிலத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 5 பேர் கைது
சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 5 நபர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.;
மும்பை,
மராட்டிய மாநிலம் நவி மும்பையில் சந்தேகத்திற்குரிய வகையில் சிலர் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள், அங்குள்ள கன்சோலி பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 5 நபர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இதன்படி ஆஹத் ஜமால் ஷேக் (22), ரேபுல் சமத் ஷேக் (40), ரோனி சரீபுல் கான் (25), ஜுலு பிலால் ஷெரீப் (28), முகமது சிராஜ் முல்லா (49) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 5 பேரும் நவி மும்பையில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் மீது வெளிநாட்டினர் சட்டம் 1946 மற்றும் பாஸ்போர்ட் விதிகள் 1950 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.