கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 5 பேர் சாவு

கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-08-10 21:43 GMT

பெங்களூரு:

கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று 24 ஆயிரத்து 504 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 1,680 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 1,058 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிக்பள்ளாப்பூர், தட்சிண கன்னடா, உத்தரகன்னடாவில் தலா ஒருவரும், ராய்ச்சூரில் 2 பேரும் என மொத்தம் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒரே நாளில் 2 ஆயிரத்து 114 பேர் குணம் அடைந்தனர். 10 ஆயிரத்து 351 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 6.85 ஆக உள்ளது.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கும் நிலையில் உயிரிழப்பு நேற்று 5-ஐ தொட்டுள்ளது சுகாதாரத்துறைக்கு சற்று ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களில் 20 வயது இளம் பெண் ஒருவரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்