திருப்பதியில் நாளை மறுநாள் 5 மணி நேரம் தரிசனம் ரத்து

திருப்பதியில் நாளை மறுநாள் 5 மணி நேரத்திற்கு தரிசனம் ரத்துசெய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.;

Update: 2022-07-10 05:16 GMT

திருமலை,

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சம்பிரதாய முறைப்படி வருடாந்திர கணக்கு தொடங்கப்படும் ஆனிவார ஆஸ்தானம் 17-ந்தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, நாளை மறுதினம் கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் வகையில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

அன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு 11 மணிக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

எனவே 5 மணி நேர இடைவெளியில் எந்த பக்தர்களுக்கும் அனுமதி இல்லை. அதனால், 12-ந்தேதி வி.ஐ.பி. தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. 11-ந்தேதி வி.ஐ.பி. தரிசனத்திற்கு எந்தவித பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்படாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்