திருமண விருந்தில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது சோகம்... பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் தனியார் பேருந்து மீது கார் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.;
சாங்லி,
மராட்டிய மாநிலம் சாங்லி மாவட்டத்தில் புதன்கிழமை மாலை தனியார் பேருந்து மீது கார் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
முன்னதாக, கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் நடைபெற்ற திருமண விருந்தில் கலந்து கொண்ட சிலர், மராட்டிய மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ள சவர்டேவுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் புனேவில் இருந்து 200 கி.மீ. தொலைவில், ஜம்புல்வாடி அருகே விஜாப்பூர்-குஹாகர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது கார், தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த இருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.