பிபோர்ஜோய் புயல் காரணமாக கேரளாவில் 5 நாட்கள் கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பிபோர்ஜோய் புயல் காரணமாக கேரளாவில் 5 நாட்கள் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2023-06-07 04:20 GMT

புதுடெல்லி,

பிபோர்ஜாய் புயல் காரணமாக கேரளாவில் 5 நாட்கள் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு 'பிபோர்ஜோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் வழங்கியுள்ள 'பிபோர்ஜோய்' என்ற பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும்.

இந்த புயல் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது என்றும், இந்த புயலால் கேரளா முதல் மராட்டிய மாநிலம் வரையிலான நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பிபோர்ஜோய் புயல் காரணமாக கேரளாவில் 5 நாட்கள் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்