கர்நாடக ஐகோர்ட்டுக்கு 5 நாட்கள் விடுமுறை
கர்நாடக ஐகோர்ட்டுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் தசரா விழா தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தசரா விழாவையொட்டி கர்நாடக ஐகோர்ட்டுக்கு5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வருகிற 3-ந் தேதியில் இருந்து 7-ந் தேதி வரை கர்நாடக ஐகோர்ட்டுக்கு விடுமுறை ஆகும். ஆனால் விடுமுறை நாட்களில் செயல்படும் அமர்வுகள் மட்டும் செயல்படும் என்றுதலைமை நீதிபதி அலோக் ஆராதே தெரிவித்துள்ளார்.
அதன்படி, நீதிபதிகள் சுனில்தத், சிவசங்கரேகவுடா ஆகியோர் அடங்கிய அமர்வு மற்றும் தனி நீதிபதி அமர்வுக்காக நீதிபதிகள் எம்.ஜி.எஸ்.கமல், பூனஜ்ஜா ஆகியோரை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.