சுப்ரீம் கோர்ட்டின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்பு
சுப்ரீம் கோர்ட்டின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி என்.வி.ரமணா பதவியேற்றார். இவர் நேற்று பணி ஓய்வு பெற்றதால் அடுத்த தலைமை நீதிபதி யார் என்ற கேள்வி எழுந்தது. புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி யு.யு.லலித்தை நியமிக்க தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரை செய்தார். இதற்கான கடிதத்தை அவர் மத்திய அரசிடம் வழங்கினார்.
இதனை தொடரந்து சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி யு.யு.லலித் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் சுப்ரீம் கோர்ட்டின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.