4,798 மாற்றுத்திறனாளிகள் மத்திய அரசு பணிக்கு தேர்வு - மத்திய மந்திரி ஜிதேந்தர் சிங்

2018 முதல் 2021-ம் ஆண்டு வரை 4,798 மாற்றுத்திறனாளிகள் மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ஜிதேந்தர் சிங் கூறினார்.

Update: 2022-12-21 14:23 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய மந்திரி ஜிதேந்தர் சிங் கூறுகையில்,

நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி மற்றும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 3.77 லட்சம் பேர் அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர்.

அரசுத் துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட வேண்டும் என்று மத்திய அரசு அனைத்துத்துறைகளுக்கும், அமைச்சர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களைக் கண்டறிந்து அவற்றை நிரப்பும் பணி தீவிர வேகத்தில் நடந்து வருகிறது.

2018 முதல் 2021- ஆண்டு வரை 4,798 மாற்றுத்திறனாளிகள் மத்திய அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தேவையான பணிகளுக்கு குறிப்பிடத்தக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்