நேபாளத்தில் அடுத்தடுத்து அதிர வைத்த நிலநடுக்கம்..!!

நேபாளத்தின் பாக்லுங் மாவட்டத்தில் 4.7 மற்றும் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அடுத்தடுத்து ஏற்பட்டது.

Update: 2022-12-27 22:34 GMT

கோப்புப்படம்

காத்மண்டு,

நேபாள நாட்டின் பக்லுங் மாவட்டத்தின் இருந்து இன்று அதிகாலை 1.23 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலநடுக்கம் 4.7 மற்றும் 5.3 ரிக்டர் அளவுகோலில் அடுத்தடுத்து ஏற்பட்டது. அதில் முதல் நிலநடுக்கம் பக்லுங் மாவட்டத்தின் அதிகாரிசௌர்ஐச் சுற்றி 4.7 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது

இரண்டாவது நிலநடுக்கம் 5.3 அளவில் பாக்லுங் மாவட்டத்தின் குங்காவைச் சுற்றி தாக்கியதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக உறுதியான விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்