இந்தியாவில் மேலும் 441 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!

இதுவரை நாடு முழுவதும் 220.67 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-13 10:48 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அத்துடன் ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 441 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது 3,368 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். காலை 8 மணி நிலவரப்படி கொரோனாவால்  உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

4.5 கோடிக்கும் அதிகமான மக்கள் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் 5.3 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை நாடு முழுவதும் 220.67 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்