ஒடிசா: ஜனவரி மாதம் திறக்கப்பட்ட 40 அடி உயர ஆக்கி வீரர் சிலை சரிந்தது

ஒடிசாவின் ரூர்கேலாவில் 40 அடி உயர ஆக்கி வீரரின் சிலை தரையில் விழுந்தது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2023-06-11 19:18 GMT

ரூர்க்கேலா,

உலக கோப்பை ஆக்கி போட்டிகள் ஒடிசாவில் கடந்த ஜனவரி மாதம் நடந்தது. இதை முன்னிட்டு ரூர்க்கேலாவில் உள்ள பிர்சா முண்டா விளையாட்டு மைதானம் அருகே 40 அடி உயரத்தில் ஆக்கி வீரர் சிலை ஒன்று நிறுவப்பட்டது.

ரூ.30.68 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த சிலையை மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் திறந்துவைத்தார். புவனேஸ்வரை சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்த இரும்பு சிலையை வடிவமைத்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை செய்தது. அப்போது திடீரென இந்த சிலை சரிந்து விழுந்தது. பலத்த காற்று வீசியதால் சிலையின் 2 கால்களும் உடைந்தன. இதைத்தொடர்ந்து சிலை கீழே சரிந்தது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்