ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் இருவேறு பகுதிகளில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Update: 2022-06-21 08:26 GMT

கோப்புப்படம் 

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய இருவேறு என்கவுன்டர்களில் கொல்லப்பட்ட 4 பயங்கரவாதிள் 4 பேர் சுட்டுகொல்லப்பட்டனர்.

பாரமுல்லா மாவட்டம் சோபூர் பகுதியில் உள்ள துலிபால் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை என்கவுண்டராக மாறியது, இதையடுத்து பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்டரில் அடையாளம் தெரியாத இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்,

அதே போல், தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள துஜ்ஜானில் நடந்த மற்றொரு என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த மஜித் நசீர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காஷ்மீர் காவல் கண்காணிப்பாளர் விஜய் குமார் தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு போலீஸ் அதிகாரி ஃபரூக் அகமது மிர் கொலையில் நசீருக்கு தொடர்பு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்