டெல்லியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 4 போலீசார் உட்பட 5 பேர் கைது.!

நான்கு போலீசார் கைது செய்யப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Update: 2023-04-21 23:29 GMT

புதுடெல்லி,

தென்மேற்கு டெல்லியின் சாகர்பூர் பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக டெல்லி போலீஸ் அதிகாரிகள் 4 பேர் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் டெல்லி போலீஸ் அதிகாரிகள் விஜய் சர்மா, தீபக் யாதவ், மஞ்சேஷ் ராணா மற்றும் அங்கித் கசானா மற்றும் ரோகினியில் வசிக்கும் மணீஷ் ராய் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

போலீசாரின் கூற்றுப்படி, ரஜ்னிஷ் என்ற நபரின் வீட்டில் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை இடைப்பட்ட இரவில் கொள்ளை நடந்துள்ளது. நான்கு பேர் தனது வீட்டிற்குள் நுழைந்து, தன்னை மிரட்டி, 10.40 லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பிச் சென்றதாக, பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டினார்.

இந்த புகாரின் கீழ் கொள்ளை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையின் போது, நான்கு போலீசார் கைது செய்யப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

Tags:    

மேலும் செய்திகள்