கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட 4 பேர் கைது

கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-09 16:53 GMT

உப்பள்ளி: தார்வாரில் கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளநோட்டுகளை அச்சடித்து...

தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா குடேனஹட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாகர் காசப்பன்னவர்(வயது 42). இவர் பா.ஜனதா பிரமுகர் ஆவார். இந்த நிலையில் இவரது தலைமையிலான ஒரு கும்பல் கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டு வருவதாக குந்துகோல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து குந்துகோல் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் சாகரையும் கண்காணித்து வந்தனர். அப்போது அவர் குந்துகோலில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகே பால் விற்பனை கடை வைத்து நடத்தி வந்ததும், பட்டதாரியான அவர் அரசு வேலைக்கு முயற்சித்து வந்ததும் தெரியவந்தது.

கைது

மேலும் இவர் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், மொத்த வியாபாரிகளிடம் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சாகரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் அவரது கூட்டாளிகளான சிரகட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர், கதக் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது கள்ளநோட்டுகளை சிரகட்டி மற்றும் கதக்கை சேர்ந்தவர்கள் அச்சடித்து சாகரிடம் கொடுத்ததும், அதை அவர் கடையில் வைத்து புழக்கத்தில் விட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கைதானவர்களிடம் இருந்து ரூ.19 ஆயிரம் ரொக்கம், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்கு தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்