மேகாலயாவில் நிலச்சரிவு: வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

மேகாலயாவில் நிலச்சரிவு காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.;

Update: 2023-10-08 21:39 GMT

மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ்,

மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸில் உள்ள பைந்தோர்லாங்டைன் பகுதியில் நேற்று பெய்த தொடர் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிருடன் புதைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர் முயற்சிக்கு பிறகு, இடிபாடுகளில் இருந்து நான்கு பேரின் சடலங்களையும் போலீசார் மீட்டனர்.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு மாநில அரசு நிவாரண நிதி வழங்கி உள்ளதாக மேகாலயா டிஜிபி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்