ஈரத்துணிகளை காயவைத்த போது மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

தெலங்கானாவில் இரும்புக்கம்பியில் ஈரத்துணிகளை காயவைத்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் பெண் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.;

Update: 2022-07-14 11:41 GMT

ஐதராபாத்

தெலுங்கானா காமாரெட்டி மாவட்டத்தில் பீடி தொழிலாளர்கள் காலனி பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வந்த பர்வீன் என்ற பெண் சுவற்றில் கட்டப்பட்டிருந்த இரும்புக்கம்பியில் துணிகளை காயவைத்துள்ளார். அப்போது அந்த கம்பி மீது சென்ற வயரில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்ததில் பர்வீன் துடித்துக்கொண்டிருந்துள்ளார். அவரைக் காப்பாற்ற சென்ற கணவர் அகமது மற்றும் அவர்களது மகன் அத்னான், மகள் மஹீம் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் 4 பேரும் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்