காஷ்மீரில் பலத்த மழை: மரம் விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

காஷ்மீரில் பலத்த மழையின் காரணமாக மரம் சாய்ந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.;

Update: 2023-05-25 23:42 GMT

கோப்புப்படம்

ஜம்மு,

காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்துக்கு உட்பட்ட பல்னா காட்டுப்பகுதியில் பழங்குடியின நாடோடி குழு ஒன்று தங்கள் கால்நடைகளுடன் குடிசைகள் அமைத்து தங்கியிருந்தனர். அந்த பகுதியில் நேற்று காலையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது பைன் மரம் ஒன்று வேருடன் சாய்ந்து குடிசை ஒன்றின் மீது விழுந்தது. இதில் குடிசையில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மரம் விழுந்து பலியான அந்த குடும்பத்தினர் கதுவா மாவட்டத்தை சேர்ந்த காதி-பர்வாலை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் காஷ்மீரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்