ஆந்திராவில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்தது - 4 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

ஆந்திராவில் பஸ் கவிழ்ந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-08-20 13:31 GMT

கோப்புப்படம்

அல்லூரி,

ஆந்திராவில் பஸ் கவிழ்ந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர்.

முன்னதாக ஆந்திர மாநிலம் அல்லூரி மாவட்டத்தில் பஸ் ஒன்று சுமார் 60 பயணிகளுடன் சோடவரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் படேரு காட் சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்