டிராக்டர்-டெம்போ மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு..! கிராம மக்கள் சாலையில் மறியல்

ராஜஸ்தானில் டிராக்டர்- டெம்போ மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2023-04-07 04:26 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் சட்டவிரோதமாக மணல் அள்ளியதாகக் கூறப்படும் டிராக்டர் மீது டெம்போ மோதியதில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் ஆல்வாரில் உள்ள கத்தூமர் நகரில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தால் கோபமடைந்த கிராம மக்கள், உயிரிழந்தவர்களின் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்த போலீஸ் வாகனங்கள் மீது கற்களை வீசினர். இதனால், அப்பகுதி பரபரப்புடன் கானப்பட்டது.

மணல் கடத்தல் கும்பலுக்கும், போலீசாருக்கும் தொடர்பு இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பின்னர் பல மணி நேர வற்புறுத்தலுக்குப் பிறகு, சடலங்களை பிணவறைக்குக் கொண்டு செல்ல பொதுமக்கள் போலீசாரை அனுமதித்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்