காஷ்மீர்: தேசவிரோத செயலில் ஈடுபட்ட வங்கி மேலாளர், போலீஸ்காரர் உள்பட 5 பேர் பணிநீக்கம்

தேசவிரோத செயலில் ஈடுபட்ட வங்கி மேலாளர், அரசு ஊழியர்கள் என 5 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.;

Update: 2022-10-15 09:22 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத செயல்கள், தேசவிரோத செயல்களில் அரசு ஊழியர்கள் சிலரும் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இது தொடர்பாக, உளவுத்துறையினர் ரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேசவிரோத செயலில் ஈடுபட்ட வங்கி மேலாளர் மற்றும் 4 அரசு ஊழியர்கள் அதிரடியாக இன்று பண் நீக்கம் செய்யப்பட்டனர். பாரமுல்லா மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் அபிக்யூ அகமது வானி, ஜம்மு - காஷ்மீர் காவல்துறையில் பணியாற்றும் போலீஸ் கான்ஸ்டபிள் சலீம் தர், கிராம பஞ்சாயத்து ஊழியர் சையது இப்கார் அண்ட்ரபி, பாரமுல்லா நீர்வளத்துறையில் பணியாற்றும் இஷ்ரத் அகமது கான், ஹண்ட்வாரா பகுதியில் மின்வாரியத்துறையில் பணியாற்றும் அப்துல் மாமின் பீர் ஆகிய 5 பேரையும் பணி நீக்கம் செய்து ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.   

Tags:    

மேலும் செய்திகள்