அடுத்தடுத்து பிறந்த 4 பெண் குழந்தைகள்..கணவன் எடுத்த விபரீத முடிவு -கர்நாடகாவில் அரங்கேறிய அதிர்ச்சி
அடுத்தடுத்து 4 பெண் குழந்தைகள் பிறந்த விரக்தியில் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறி இருக்கிறது.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சீனிவாசபுரா தாலுகாவை சேர்ந்தவர் லோகேஷ். ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவரின் மனைவி சிரிஷா. ஆந்திராவை சேர்ந்தவர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக இவர்களுக்கு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு அடுத்தடுத்து 3 பெண் குழந்தைகள். இதனிடையே மீண்டும் கர்ப்பமானார் சிரிஷா. தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கப்போகிறது என்ற ஆசையில் இருந்த லோகேஷூக்கு மீண்டும் அதிர்ச்சி. காரணம் 4வதாக பிறந்ததும் பெண் குழந்தையாக இருக்கவே விரக்தியடைந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் முடிவால் 4 குழந்தைகளை வைத்துக் கொண்டு சிரிஷா நிர்கதியாக நிற்கும் நிலைக்கு ஆளாகி உள்ளார்.