உத்தர பிரதேசத்தில் லாரி மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு
உத்தர பிரதேசம் மாநிலம் பூர்வாஞ்சல் விரைவுச் சாலையில் கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
சுல்தான்பூர்,
உத்தர பிரதேசம் மாநிலம் பூர்வாஞ்சல் விரைவுச் சாலையில் கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
சுல்தான்பூரில் இருந்து சென்று கொண்டிருந்த பிஎம்டபிள்யூ கார் ஒன்று, ஹாலியாபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விரைவு சாலையில் எதிரே வந்த கண்டெய்னர் மீது கடுமையாக மோதியது. விபத்தைத் தொடர்ந்து கார் என்ஜின் மற்றும் காரில் பயணித்த 4 பேர் சிறிது தூரம் சென்று விழுந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உத்தரபிரதேச விரைவுச்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் மற்றும் போலீசார், நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் பீகார் மாநிலம் தேஹ்ரியில் வசிக்கும் ஆனந்த் பிரகாஷ் (35), பீகார் மாநிலம் அவுரங்காபாத்தைச் சேர்ந்த அகிலேஷ் சிங் (35) மற்றும் தீபக் குமார் (37) ஆகிய மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நான்காவது நபரை அடையாளம் காணும் முயற்சிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.